பின்வரும் தகமைகள் எதிர்பார்க்க படுகின்றன:
• 2010ல் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
• எமது கல்லூரியில் ஆக கூடிய புள்ளிகளை பெற்று இருக்க வேண்டும்.
• எமது கிராமத்துக்கு உங்களால் செய்ய கூடிய சேவைகள் தொடர்பாக இரு பக்கங்களுக்கு குறையாத கட்டுரை ஒன்று எழுத வேண்டும்
• உங்கள் ஆக்கங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்க படவேண்டும். .
• ஊக்குவிப்பு தொகை இரண்டு பிரிவுகளாக வழங்க படும். முதல் தொகை 5000/=
• பல்கலைகழகம் செல்லு முன் எமது கிராமத்துக்கு ஏதாவது ஒரு சேவையினை செய்துவிட்டு மிகுதி 5000/= பெற்று கொள்ளலாம்.
திரு டொமினிக் லம்பேர்ட் (Mr. Dominic Lambert ) அவர்கள் எமது மண்ணையும் மக்களையும் அதிகமாக நேசித்தவர்களில் ஒருவர்.
ஒரு முற்போக்கு சிந்தனைவாதி. அவரின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தவர்கள் மூலம் இந்த உதவி வழங்கப் படுகின்றது.